இளம்பெண்ணை கொடூரமாக அடித்தே கொன்ற கணவன்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்த வைஷ்ணவி (26). கணவர் தீக் ஷித் (26) கொடூரமாக தாக்கியதில் வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்துடன் வைஷ்ணவிக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று இரவு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி வைஷ்ணவியை மாங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தீக் ஷித் அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் வைஷ்ணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், வைஷ்ணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வைஷ்ணவியின் உடலில் காயங்களும் இருந்ததாக மருத்துவக் கண்ணோட்டத்தில் தெரிந்துள்ளது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் தீக் ஷித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் குடும்ப தகராறின் போது அவர் வைஷ்ணவியை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
