நெகிழ்ச்சி... கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்...!!

 
கலைச்செல்வி

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரில் வசித்து வருபவர்   இளையராஜா.  இவர் மெடிக்கல்ஷாப் ஒன்றை   நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி இவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.கலைச்செல்வி 2020ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலைச்செல்வி

அவரது திடீர் உயிரிழப்பு  இளையராஜாவை மிகவும் பாதித்தது. இளையராஜா தனது மனைவியின் மீது கொண்ட மாறாத அன்பால் அவரது நினைவாக  பாண்டியூர் அருகே மனைவிக்கு கோயில் கட்டினார். அந்த கோவிலில் அவரது உருவச்சிலையை அமைத்தார்.   தினமும் மனைவியின் சிலையை வணங்கிய பிறகே  தனது தொழிலை செய்ய தொடங்குகிறார்.  மனைவிக்கு கோவில் கட்டியதுடன் நின்றுவிடாமல்  அதே  பகுதியில் சிவன் கோயில் ஒன்றையும் உருவாக்கி அதில் இஷ்ட தெய்வங்களின் சிலைகளையும் இளையராஜா நிறுவியுள்ளார். அவைகளுடன்  மனைவியின் சிலையையும் இணைத்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை


இது குறித்து இளைஞராஜா ”  பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்த மனைவி கலைச்செல்வி கடவுளை சேர்ந்து விட்டார்.  அவரின் நினைவாக கோயில் கட்டிவணங்கி வருவதாகவும், பௌர்ணமி, கார்த்திகை உட்பட  முக்கிய நாட்களில்  இந்த வழியாக   வரும் அனைவருக்கும்  அன்னதானம் வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.  
இதற்கு அவரது மகன் ஸ்ரீஹரி பாண்டியனும், மகள் சௌந்தர்யாவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். தன்  மனைவி உயிருடன் இருந்த போது செவிலியராக செய்த சேவையை விட இது சிறியது தான் என கூறுகிறார். இவரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web