அழகி போட்டியில் கலந்து கொண்ட பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அரைத்து அமிலத்தில் கரைத்த கணவன்... கொடூரத்தின் உச்சம்!

 
கிறிஸ்டினா
 

சுவிட்சர்லாந்தில்  2003ல் வடமேற்கு சுவிட்சர்லாந்து அழகியாக தேர்வானவர், 2008ல் சுவிஸ் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவானவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக். இவர் தனது கணவரால் கொடூரமாக கொல்லப்பட்டதுடன், உடலை அந்த நபர் துண்டு துண்டாக வெட்டவும் செய்துள்ளார். கொடூரத்தின் உச்சமாக உடல் பாகங்களை அடையாளம் காணாதபடி அந்த நபர் அரைத்துள்ளார்.

ஆனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், தற்காப்புக்காக தமது மனைவியை கொல்லும் நிலை ஏற்பட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கத்தியால் தம்மை தாக்க முயன்றதாலையே, வேறு வழியின்றி தமது மனைவியை கொலை செய்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.            
 போலீஸ்
அது உண்மைக்கு புறம்பானது என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டினாவின் எஞ்சிய உடல் பாகங்கள் பேசல் மாகாணத்தின் பின்ங்கன் பகுதியில் இருந்து பிப்ரவரி மாதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் 41 வய்தான தாமஸ் இதன் அடுத்த நாள் கைதாகியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்டினா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, காவலில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என முறையிட்ட மனுவை பெடரல் நீதிமன்றம் செப்டம்பர் 11-ம் தேதி நிராகரித்துள்ளது. உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான தகவலின் அடிப்படையில், தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டியதாக அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை
 
மேலும் எஞ்சிய உடல் பாகங்கள் அரைக்கப்பட்டு, அமிலத்தில் கலந்ததாகவும் அந்த நபர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த விசாரணையில் அந்த நபர் கொடூர குணத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இரக்கம் என்பது அவரிடம் துளியும் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை