மனைவி இறந்ததால் வேதனையில் கணவர் தற்கொலை... தூத்துக்குடியில் சோகம்!

 
தூக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி இறந்ததால் மன வேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தற்கொலை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் காளிராஜன் (44), டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள் (38) நேற்று காலை திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

தூக்கு

இதனால் மன வேதனை அடைந்த காளிராஜன் இன்று காலை தூத்துக்குடி மேல ரங்கநாதபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?