’ பொண்டாட்டி தொல்லை தாங்கல’ கடிதம் எழுதி கணவன் தூக்கிட்டு தற்கொலை!!

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத்.இவருக்கு வயது 38. இவர் மெட்ரோவில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை. மஞ்சுநாத் திடீரென தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் மஞ்சுநாத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அத்துடன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி , மஞ்சுநாத்தின் மனைவி பிரியங்கா அவரை, அடிக்கடி கிராமத்தான் என கடுப்பேற்றிக் கொண்டே இருந்துள்ளார். அத்துடன் நிறுத்தாமல் உன் கூட எல்லாம் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை எனவும் கூறிக்கொண்டேஇருந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுநாத், மனைவி தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறேன்
தனது சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!