வீட்டிலையே கஞ்சா செடி வளர்த்த கணவர்.. ஆத்திரத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்த மனைவி!

 
சிவபிரசாந்த்

ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியை சேர்ந்த பெதராஜ் என்பவரின் மகன் சிவபிரசாந்த் (36 )என்பவர் ஆந்திர மாநிலம் ராஜ் மன்றி பகுதியை சேர்ந்த ஜான்சி என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மந்தத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலைக்கு வந்து அங்கேயே ஹோட்டல் வைத்து  இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் சிவபிரசாந்த் கஞ்சாவிற்கு அடிமையாகி தினமும் கஞ்சா அடித்து விட்டு ஜான்சியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிவபிரசாந்தின் தொந்தரவு தாங்காமல் ஜான்சி கணவர் பிரசாத் மீது மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து வைத்து சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் ஏலகிரி மலையிலிருந்து ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதிக்கு கடந்த மே மாதம் குடித்தனம் வந்துள்ளனர்.

இருந்த போதிலும் சிவ பிரசாந்த் கஞ்சா அடிப்பதை நிறுத்தாமல் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் காஞ்சா செடிகளை நட்டு வைத்து அவ்வபோது அவருக்கு தேவைப்படும் நேரத்தில் கஞ்சாவை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் தினமும் மனைவியிடம் தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து வீட்டில் காஞ்சா செடியை வளர்த்து வருவதை கண்டுபிடித்த ஜான்சி இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை SI ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வளர்த்து வந்த 5 கஞ்சா செடியை பறிமுதல் செய்து சிவபிரசாத்தை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சிவபிரசாந்தின் மனைவி ஜான்சி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சிவபிரசாந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் கஞ்சா அடிப்பதற்காக தானே வீட்டின் பின்புறம் காஞ்சா செடிகளை வளர்த்து காஞ்சா அடித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web