உயிரிழந்த மனைவிக்கு சிலை செய்து பணிவிடை செய்யும் கணவர்... நெகிழ்ச்சி!

 
ஈஸ்வரி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் வசித்து வருபவர்  நாராயணன். இவர்  1968 ல் ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு   ஆனந்த், அம்சா, அமிர்த பானு, பாபு என  4 பிள்ளைகள் . இவர்கள்    அனைவருக்கும்   15 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்து முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவர்கள் தனித்தனி குடும்பமாக வசித்து வரும் நிலையில் நாராயணனுக்கு மனைவி இல்லாத தனிமை.

திருமணம் கல்யாணம் கும்பம்

ஏற்கனவே   நாராயணன்  அச்சகம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் காலக்கோட்டில் சொந்தமாக அச்சகம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அதையும் விடுத்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.   8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி ஈஸ்வரி அவரது 65 வயதில் சர்க்கரை நோயால் திடீரென காலமானார்.  தன் மீது  பாசம் மட்டுமே  வைத்திருந்த மனைவி உயிரிழந்ததை நாராயணனால் தாங்கிக் கொள்ளவே   முடியவில்லை.

திருமணம்

இந்த பிரிவையும், ஆற்றாமையை தேற்றிக் கொள்ள மனைவியை சிலையாக செய்ய முடிவு செய்தார்.  மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளார். மெழுகு மற்றும் சிலிகானால் செய்யப்பட்ட இந்த சிலை ஈஸ்வரி அம்மாள்  உயிருடன் இருப்பது போன்ற தோற்றத்தையும்,  மன நிறைவையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்  .

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web