மனைவியிடம் விவாகரத்து பெற கணவர் போட்ட பிளான்.. காரில் கஞ்சா செடி வைத்து வசமாக சிக்கிய பின்னணி!

 
கஞ்சா செடி

37 வயதான டான் சியாங்லாங் (Tan Xianglong) 2021 இல் சிங்கப்பூரில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் டான் சியாங்லாங்  ஒரு வருடம் கழித்து மனைவியைப் பிரிந்தார். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்யவில்லை. சிங்கப்பூர் சட்டப்படி, திருமணமான 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் விவாகரத்து கோர முடியும். ஆனால் தம்பதிகளில் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு இருந்தால் உடனே விவாகரத்து பெறலாம். எனவே கணவர் ஒரு திட்டம் தீட்டினார்.

கணவன் மனைவி சண்டை

500 கிராம் கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் காரின் பின்புறம் நட்டுள்ளார். இதில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளன. அப்போது அவரது காரை சோதனை செய்த போலீசார் போதைப் பொருள்களை கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர் கஞ்சா பயிரிட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போலீசார், அவரது கணவர் கஞ்சா செடிகளை நடுவது தெரியவந்தது. மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கணவனை போலீசார் கைது செய்தனர். தற்போது அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருள்  கடத்தினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web