நடுரோட்டில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்... கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு!

 
அமராவதி

தூத்துக்குடி மாவட்ட த்தில், கலெக்டர் அலுவலகம் அருகே, தனது மனைவியை துடிதுடிக்க அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே அல்லிகுளத்தைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தத்திற்கு அமராவதி சென்று கொண்டிருந்த போது, திடீரென அங்கே வந்த அமராவதியின் கணவர் குணாவும், அவரது நண்பர்களும் சேர்ந்து அமராவதியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். 

சம்பவம் நடந்த இடம்

இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த குணா, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை நடுரோட்டில் துடிதுடிக்க சரமாரியாக வெட்டினார். இதில் அதே இடத்தில் அமராவதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அமராவதியை வெட்டிவிட்டு, குணா உட்பட 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்கள். அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அமராவதியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட அமராவதி

அமராவதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய குணா உட்பட மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web