மனைவி விவாகரத்து கேட்டதால் இளைஞரை குத்தி கொலை செய்த கணவன்... பரபரப்பு வாக்குமூலம்!
மிக்சர் மாஸ்டராக வந்தவர் காதல் மாஸ்டராக போனார்: முதலாளி மனைவியை அபகரித்த 19 வயது வாலிபர் குத்தி கொலை; விவாகரத்து கேட்டதால் தீர்த்துக்கட்டிய கணவன்
திருநெல்வேலியை சேர்ந்த அல்போன்ஸ் பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ராகாரம் பகுதியில் மிக்சர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் மிக்சர்போடும் மாஸ்டராக கடந்த 4 ஆண்டுகளாக 19 வயது பவன்குமார் , இவரது தம்பி 17 வயது சிறுவன் இருவரும் பணிபுரிந்து வந்தனர். பவன்குமாருக்கும், முதலாளியான அல்போன்சின் மனைவி சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்ததும் அல்போன்ஸ், 4 மாதங்களுக்கு முன்பு பவன்குமார் மற்றும் அவரது தம்பியை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். இதனையடுத்து அண்ணன், தம்பி இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த மரிமாணிக்குப்பம் தோட்டிகுட்டை கிராமத்தில் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். ஆனாலும் சத்யாவும், பவன்குமாரும் அடிக்கடி செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்ததாக தெரிகிறது. அல்போன்ஸ், சில வாரங்களுக்கு முன் மனைவியை கண்டித்து தாக்கி உள்ளார்.
இதன்பிறகு மனைவி அவரிடமிருந்து விவகாரத்து கோரினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அல்போன்ஸ், மனைவியின் கள்ளக்காதலனான பவன்குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதன்படி 3 பேருடன் காரில் வந்த அல்போன்ஸ், பவன்குமார் தங்கியிருந்த கண்டுபிடித்து பவன்குமாரை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரி குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

அக்கம் பக்கத்தினர் பவன்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் பெங்களூருவில் பதுங்கிய அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கைதான அல்போன்ஸ் , ‘எனது மனைவியிடம் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பவன்குமாரை வேலையில் இருந்து விரட்டினேன். இருப்பினும் கள்ளத்தொடர்பில் இருந்தார். எனது மனைவியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை சிறுகசிறுக பவன்குமார் பெற்றுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தால் எனது மனைவி என்னை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தார். எனவே எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை வீடு தேடிவந்து வெட்டிக்கொன்றேன்’ என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
