“உலகிலேயே சிறந்தது ஐதராபாத் பிரியாணி தான்”... பிரியங்கா சோப்ரா கருத்து!
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படமான “எஸ்எஸ்எம்பி 29” குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’க்கு பிறகு ராஜமவுலி இயக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையை எம்.எம்.கீரவாணி அமைக்கிறார்.
#GlobeTrotter pic.twitter.com/1S9556rVVZ
— PRIYANKA (@priyankachopra) November 15, 2025
சமீபத்தில் படம் தொடர்பான பல்வேறு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலில் வில்லன் கதாபாத்திரமான ‘கும்பா’வாக பிருத்விராஜின் போஸ்டர் வெளியாக, பின்னர் மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியுடன் மந்தாகினி எனும் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டது. இதுகுறித்து ராஜமவுலி, “இந்திய சினிமாவை உலக மேடையில் புதிய உயரத்திற்கு கொண்டுசென்ற பெண் மீண்டும் வருகிறார். மந்தாகினியின் பல பரிமாணங்களை உலகம் காண காத்திருக்க முடியவில்லை” என பதிவிட்டார்.

படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் தங்கியிருக்கும் பிரியங்கா சோப்ரா, சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பேசியபோது, “ஐதராபாத் பிரியாணியை சாப்பிட்டதுண்டா?” என ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, “ஐதராபாத் பிரியாணி தான் உலகிலேயே சிறந்தது” என்று உற்சாகமாக பதிலளித்தார்.
இதேவேளை, இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் நேரடி ஒளிபரப்பு உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
