”நான் இறக்கும் வரை முஸ்லீம் தான் ” குஷ்பூவின் சர்ச்சை ட்வீட்... !

 
kushboo

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி மிக கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆன்மிகவாதிகள், அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழா உலகம் முழுவதும் பெரும் கவன ஈர்ப்பு பெற்றது. முதல் நாளில் பக்தர்கள் அனுமதிக்கு பிறகு ஒரு நாள் வசூல் ரூ3 கோடியை தாண்டியுள்ளது. இதனையடுத்து திருப்பதியை வசூலில் மிஞ்சிவிட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.  அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அமைச்சர்கள் மார்ச்சுக்கு பிறகு அயோத்தி செல்லுங்கள் உங்கள் பாதுகாப்பு விஷயங்களால் பொதுமக்கள் பாதிப்பு அடைவார்கள் எனக் கூறும் வரை சென்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.


பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும்  நடிகை குஷ்பு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, கடவுள் ராமர் மீதான பக்தியை வெளிப்படுத்தியும், இந்த நிகழ்வை நடத்தி முடித்த பிரதமர் மோடியை வாழ்த்தியும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியிருந்தார் குஷ்பு.ஆனால் இதற்கு முன் நடிகை குஷ்பு  வெளியிட்டிருந்த   பதிவில், ‘நான் இறக்கும் வரை முஸ்லிம்’ எனக் கூறியிருந்தார். ஆனால், இப்போது ராமர் மீது பக்தி என்கிறாரே என ரசிகர் ஒருவர் அவருடைய முந்தைய பதிவை எடுத்துப் போட்டு குஷ்புவை டேக் செய்திருந்தார்.

குஷ்பூ
இதற்கு பதில் ட்வீட்டில் நடிகை குஷ்பு “ ‘இப்போதும் சொல்கிறேன். நான் முஸ்லிமாகத்தான் இறப்பேன். என் மதத்தை நான் இப்போது வரையிலும் மாற்றிக் கொள்ளவில்லை. உங்களைப் போல சிலருக்குத்தான் கடவுள் மதம் சார்ந்தவர். ஆனால், நான் கடவுள் என்பது ஒருவர்தான் என நினைக்கிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள். நீங்கள் இதைப் பற்றி புரிந்து கொள்வீர்கள்’ எனப் பதில் ட்வீட்டியுள்ளார்.  இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பெரும் கவனம் பெற்றுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க