நான் உயிரோட தான் இருக்கேன்.. திவ்யா ஸ்பந்தனா ட்வீட்!!

 
திவ்யா ஸ்பந்தனா

பிரபல டோலிவுட் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர்  முன்னாள் காங்கிரஸ் எம்பியும் கூட இவர் இன்று காலை தமது 40வது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெலுங்கு வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து நடிகையின் தமிழ் திரைப்பட மக்கள் தொடர்பாளர், அவரது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை ட்வீட் செய்து அதிர்ச்சியை வெளிப்படுத்த, இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம்வருபவர் தான் திவ்யா ஸ்பந்தனா.

இதனைத் தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சிகள் , வலைதளங்களும் இந்த செய்தியை ட்ரோல் செய்து வைரலாக்கின. அதில் பொய்யான தகவல் என்றும், நான் மிக்க நலமுடன் இருக்கிறேன் என்றும் திவ்யா ஸ்பந்தனா செய்தி வெளியிட்டுள்ளார்.  நடிகை திவ்யா ஸ்பந்தனா தற்போது ஜெனிவாவில் தூங்கிக் கொண்டு இருப்பதாகவும், நாளை பெங்களூரு திரும்ப இருப்பதாகவும்  அவரது தோழிகள் தெரிவித்துள்ளனர்.


புனித் ராஜ்குமார்  குடும்பத்தை சேர்ந்த  விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா ராகவேந்திரா ஆகஸ்ட் 6ம் தேதி காலமானார். அவர் இறந்து ஒரு மாதமான நிலையில் செப்டம்பர் 6 என  தவறுதலாக புரிந்து கொண்டு, அந்த செய்தியை திவ்யா ஸ்பந்தனா என தெலுங்கு இணையதளம் செய்தி வெளியிட, அதுவதந்தியாய் மாறிவிட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web