”போலீஸ் டார்ச்சர் தாங்கல..” இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலை!!

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் சன்னப்பட்னாவில் வசித்து வருபவர் மாதுரி. இவருக்கு வயது 31. சமீபத்தில் நிதிமோசடி விவகாரம் குறித்து சமீபத்தில் சன்னப்பட்னா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருந்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் தன்னுடைய புகாரை பெற மறுத்துவிட்டனர். அத்துடன் அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என மாதுரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனது புகார் மீதான தகவல்களுக்காக பலமுறை காவல்நிலையம் சென்ற தனக்கு ஏமாற்றமே கிடைத்தது. அத்துடன் காவல்நிலைய போலீஸார் தன்னை மோசமாக துன்புறுத்தினர் என மாதுரி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். போலீஸாரின் சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் எல்லை மீறியதால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். தன்னுடைய இறப்புக்கு பின்னரேனும் தனக்கு நீதி கிடைக்குமா என மாதுரி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
சனிக்கிழமை இரவு இந்த வீடியோவை வெளியிட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையில் மேலும்’இல்லத்தரசியான மாதுரி அளித்த புகார் மற்றும் அவர் மீது சொல்லப்படும் புகார்கள் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும். மாதுரியை தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டு பின்னர் டார்ச்சர் செய்து போலீசார் தற்கொலைக்குத் தூண்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போராடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!