எங்கேயும் ஓட முடியாது... முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு லுக் -அவுட் நோட்டீஸ்!

 
ராஜேஷ்தாஸ்

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, தமிழக சிறப்பு டிஜிபி ஆக ராஜேஷ் தாஸ் இருந்தார். அப்போதையை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சி சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணிகளை ராஜேஷ் தாஸ் கவனித்தார். அப்போது, பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, தலைமைச் செயலாளரின் புகார் அளித்தார்.

எங்கேயும் ஓட முடியாது... முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு லுக் -அவுட் நோட்டீஸ்! 

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இதுதொடர்பாக, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன்,16, 2023ம் தேதி அன்று, ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவித்து, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை கடந்த பிப்.12ம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், மேல்முறையீடு செய்வதற்கு ஏதாவுக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது. 

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், சரணடைவிதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜேஷ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம்,  அவரை உடனடியாக சரண் அடையும்படியும் உத்தரவிட்டிருந்தது. சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து ராஜேஸ்தாஸ் தலைமறைவானார். அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். அவர், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web