"தீக்குளித்தால் இவ்வளவு காயம் ஏற்படும்னு தெரியாது...” தற்கொலைக்கு முயன்ற மாணவியின் உருக்கமான வாக்குமூலம்!

 
மாணவி

“தீக்குளித்தால் இவ்வளவு காயம் ஏற்படும்னு தெரியாது” என்று தற்கொலைக்கு முயன்ற 9ம் வகுப்பு மாணவி, கண்ணீருடன் பேசியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் அருகே வால் பாறை பகுதியில், 9வகுப்பு படித்து வந்த மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு  முயன்ற நிலையில், மாணவியை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, தற்கொலைக்கு தூண்டியதாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து கூறப்படுகையில், ”அந்த மாணவி ஆசிரியர்கள் தொடர்ந்து திட்டியதால், திடீரென வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, “வெந்நீர் வைத்திருந்த போது தீப்பற்றியது” என்று பெற்றோர் கூறினர்.

one side love காதல் தோல்வி இளம்பெண் மாணவி அதிகாலை தனிமை மன அழுத்தம்

ஆனால் பிறகு, மாணவியின் பெற்றோர் கூறுகையில், மாணவியின் பள்ளியில் உள்ள தமிழ் ஆசிரியை, ஆங்கில ஆசிரியை மற்றும் மற்ற ஆசிரியர்கள் மாணயைத் தொடர்ந்து கடுமையான கிண்டல்களையும், அவமானப்படுத்தலையும் செய்து வந்துள்ளனர். 

மாணவியின் தாத்தா கூறுகையில், “அவளிடம் ‘தீக்குளித்தால் மரம்‌ எண்ணெய் ஊற்றி சிகிச்சை செய்யலாம்’ என்று கூறப்பட்டு அதனைப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.” இந்த மனகவலையும், அவமானத்தையும் மாணவி கடந்து போக முடியாமல் இருக்கும்போது, மாணவி பரிதாபமாக தனது உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயன்றனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மாணவி நேற்றிரவு இறக்கமானார். அவரது பெற்றோர் இந்த கொடுமைக்கு காரணமான 3 ஆசிரியர்களுக்கான  கடுமையான தண்டனை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு புகார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாணவியின் இறுதி வாக்குமூலத்தில் கூறுகையில், “தீக்குளித்தால் காயம் சிறியதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளது பெற்றோர், உறவினர்களிடையே கண்ணீர் வரவழைத்தது.

தற்கொலை முயற்சி எதற்கும் தீர்வாகாது. மனம் விட்டு உங்களுக்கு நெருக்கமானவர்கள், பெற்றோர், உறவினர்களிடம் பேசுங்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?