காதலுக்கு ஓகே சொல்லல.. தாயின் கண் முன்னே காதலனுடன் செல்ல முயன்ற மகள்!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் - கோமளவள்ளி தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகள் மோகனா, கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். மோகனாவும், கோமளவல்லியும் ஊருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்புக்கு சென்றுள்ளனர். திடீரென்று ஒரு கார் அவர்கள் அருகே நிற்க, மோகனா அந்த காரில் ஏற முயற்சித்தார். இதை சற்றும் எதிர்பாராத கோமளவல்லி அதிர்ச்சியில் மகளை மீட்க முயன்றார்.
காரில் இருந்த வாலிபர்கள் மோகனாவை இழுத்து செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரை சுற்றி வளைத்தனர். காரில் இருந்தவர்களிடம் மக்கள் விசாரித்தபோது, அந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், மதுக்கரை பகுதியை சேர்ந்த டேனியல் என்ற வாலிபரும், மோகனாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதற்கு பெற்றோர் சம்மதிக்காததால், குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!