வீடியோ.... ”புருஷன் வேணும்”!! பதாகையுடன் சாலையில் நிற்கும் மாடல்!!

 
கரோலினா

அமெரிக்காவின் நியூயார்க்   மன்ஹாட்டன் பகுதியில் வசித்து வரும் பிரபல மாடல்   கரோலினா கீட்ஸ். இவருக்கு வயது 29 . இவர் இதுவரை   10க்கும் மேற்பட்ட மாடலிங் இதழ்களின் அட்டை படத்தில் இடம்பிடித்தவர்.  இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனக்கான கணவனைத்   வருகிறார். இதற்காக பல்வேறு டேட்டிங் ஆப்களை முயற்சித்தும் பார்த்தார். எதிலும் திருப்தியில்லாமல் தற்போது   நூதன முறையை கையில் எடுத்துள்ளார்.

 அதன்படி சாலையில் ஒரு பதாகையுடன் நான் கணவரை தேடுகிறேன் எனப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கையில் பதாகையுடன் நிற்கும் இவரை பலர் முயற்சிக்கின்றனர். விருப்பமின்றி விலகி ஓடுகிறார்.  இவரது பாதகையை பார்த்த ஒருவருடன் தன் போன் நம்பரை பரிமாறிக் கொண்ட கரோலினா, எனக்கான துணையை கண்டுபிடித்து விட்டேன் என நினைக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

கரோலினா

அவருடன் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அந்த நபர் தனக்கு ஏற்றவர் அல்ல என்பதால், அவர் மீண்டும் சாலையில் பதாகையுடன் நின்று வருகிறார். இதன் மூலம் தான் தேடும் ஒரு நல்ல கணவர் தனக்கு கிடைப்பார் என நம்புவதாகவும் தொடர்ந்து அதுவரை முயற்சிப்பேன் என்றும் பதிவிட்டுள்ளார்.  சாலைகளில் கணவனை தேடும் முயற்சி குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web