‘சாகும் வரை உதவி செய்துக்கிட்டே தான் இருப்பேன்’ - நடிகர் பாலா பேட்டி!
நடிகர் பாலா குறுகிய காலத்தில், மக்களுக்கு உதவி செய்து வருவதன் மூலமாக பிரபலமான நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் பதிலளிப்பேன் என்று கூறினார். உதவிகள் செய்வது குறித்த கேள்விக்கு, “நான் சாகும் வரை உதவி செய்து கொண்டே இருப்பேன்” என்று பதிலளித்தார்.
சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே புகழ்பெற்ற நடிகர் பாலா, தன்னுடைய உதவி செய்யும் வீடியோக்களால் மக்களிடையே புகழ் பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘காந்தி கண்ணாடி’ என்ற என்ற படம் வெளியானது. இவர் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

நடிகர் பாலா செய்து வரும் உதவிகளுக்கு ஒருபுறம் மக்களின் ஆதரவு கிடைத்தாலும், அவர் மீது சமீப காலமாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில் நடிகர் பாலா பங்கேற்றார்.
அங்கு அவரை காண்பதற்காக வந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை கடை ஊழியர்கள் வெகு நேரமாக காத்திருக்க வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்து பாலா உடனடியாக அந்த நபரை சென்று சந்தித்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலா செய்யும் உதவிகள் குறித்து விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், “அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு மூலம் பதிலளிப்பேன்” என்று கூறினார்.
“நீங்கள் செய்து கொண்டிருக்கும் உதவிகள் தொடருமா?” என்ற கேள்விக்கு, “நிச்சயமாக, நான் சாகும்வரை உதவிகளை செய்து கொண்டே இருப்பேன். இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்ததை, நம்மிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
