ட்ரம்ப்பின் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வேன்... உக்ரைன் அதிபர்!
உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய பங்காற்றினால், அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை இது குறித்து உக்ரைன் அதிபர் "உலகத்துக்கும் உக்ரைனுக்கும் டிரம்ப் அமைதியின் வாய்ப்பை வழங்கினால், அவரின் பெயரை நாங்கள் பரிந்துரைப்போம்" எனக் கூறியுள்ளார்.

டிரம்ப்பின் ஆதரவைப் பெறுவதற்காக ஜெலென்ஸ்கி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் இது சிரமமாக இருந்தாலும், இப்போது சில முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. ரஷியாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதங்களாகக் கருதப்படும் டாமஹாக் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க டிரம்ப் சம்மதிக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், டிரம்ப்பின் நீண்ட நாட்களாக இருந்த நோக்கமான அமைதிக்கான நோபல் பரிசு, அவரது முயற்சிகள் மூலம் சாத்தியமாகும் என ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
