பளீஸ் விட்டுடுங்க.. இந்த நடிகையோட நடிக்கமாட்டேன்... கெஞ்சிய விஜய் சேதுபதி!!

 
விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டி

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்தவர் மக்கள் நாயகன்  நடிகர்  விஜய் சேதுபதி. ஒரே சமயத்தில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர், சிறப்பு தோற்றம் என பல கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து ரசிகர்களை ஆச்சரிய கடலில் மூழ்கடிப்பவர்.   இவரது நடிப்பு திறமையுடன் எளிமையால் ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டவர். தற்போது தனது 50வது படமான மகாராஜாவில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டி

கதாநாயகன் மட்டுமில்லை பிற  மொழி படங்கள், வெப் சீரிஸ்கள் என பிஸியான ஆர்ட்டிஸ்டாக இருந்து வரும் விஜய் சேதுபதி சமீபத்தில் கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்துவிட்டாராம். டோலிவுட்டில் இளம் நடிகையான கிருத்தி ஷெட்டி, குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்துவிட்டார்.  இவர்   தி வாரியர், கஸ்டடி படங்களில் நடித்தவர்.  இந்நிலையில் விஜய் சேதுபதியின் புதிய படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக நடிக்க கிருத்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.   விஜய் சேதுபதி, உடனடியாக படக்குழுவினரை தொடர்புகொண்டு, கிருத்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.  இதற்குரிய காரணம் கேட்டபோது  உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் கிருத்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்தது விஜய் சேதுபதி தான்.

விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டி

அதனால், மகளாக நடித்த கிருத்தி ஷெட்டியுடன் ஜோடியாகவும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.   உப்பென்னா க்ளைமேக்ஸ் சீனில், கிருத்தி ஷெட்டிக்கு தன்னை அப்பா என அழைப்பதில் தயக்கம் இருந்தது. அப்போது விஜய் சேதுபதி கிருத்தி ஷெட்டியிடம், எனக்கு உன் வயதில் மகன் இருக்கிறான். அதனால், உன்னை என் மகளாக தான் பார்க்கிறேன். நீ தயங்காமல் என்னை அப்பாவாக நினைத்து நடிக்கலாம் என உற்சாகம் கொடுத்த பிறகு தான் அந்த சீனில் அசத்தலாக பேசி   கிருத்தி ஷெட்டியால்  ஓகே வாங்கியுள்ளார்.   அப்போது முதல் கிருத்தி ஷெட்டி தனக்கு மகள் போல இருப்பதால், அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி உறுதியாக கூறிவிட்டாராம்.இத்தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பேசுபொருளாகவும் அமைந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web