ஐஸ்லாந்து ஊரை சூழ்ந்த எரிமலை குழம்புகள்.. எச்சரித்த வானிலை மையம்.. வீட்டை காலி செய்த மக்கள்..!
ஐஸ்லாந்து பூமியின் வட துருவத்தில் உள்ளது. குளிர் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், இது நூற்றுக்கணக்கான எரிமலைகளுக்கு தாயகமாக உள்ளது. இவற்றில் 30 எரிமலைகள் இன்றும் செயலில் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் அப்பகுதியில் எரிமலை வெடித்தது. இதிலிருந்து எரி குழம்பு மிகுந்த வீரியத்துடன் வெளிவந்தது. எனினும், எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதேபோல், சுண்ட்னுகூர் மலைக்கு வடகிழக்கே கிரின்டாவிக் கடற்கரையில் இன்று காலை 6:00 மணியளவில் மற்றொரு எரிமலை வெடித்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெடித்த எரிமலையில் இருந்து லாவா ஓட்டம் சுமார் 50 மீட்டர் உயரம் உள்ளதாகவும், அதில் இருந்து வெளியேறும் எரிமலைக்குழம்பு கிரின்டாவிக் மேற்கு நோக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 3,800 பேர் அப்பகுதியில் வசிக்கின்றனர் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டதால் எரிமலைக்குழம்புகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்படுகிறது.மேலும், அப்பகுதியில் இயங்கி வந்த ப்ளூ லகூன் தெர்மல் ஸ்பா மூடப்பட்டு, அங்கு தங்கியிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெடிப்புக்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் தொடர் நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க