இதச் செய்யல்லனா ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும்... !

 
ரேஷன்

தமிழகம் முழுவதும்  மொத்தம் 2.20 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.   ரேஷன்கடைகளில் குளறுபடிகளை தவிர்க்கவும், மானிய விலையில் பொருட்கள்  உரிய பயனாளிகளுக்கு சென்று சேரவும் பயோமெட்ரிக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது.  குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்  நடைமுறை அமலில் தற்போது உள்ளது.  நேரில் சென்று விரல் ரேகையை பதிவு செய்து பொருள்களை பெற முடியாதவர்கள் அதற்கான படிவத்தில் சான்று அளித்து வேறொரு நபர் மூலம் பொருள் வாங்கிக்கொள்ளலாம்.  

ரேஷன்


 இந்நிலையில் ரேஷன் அட்டையில் உள்ள பெயர்களை உறுதி செய்யும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் இருப்பவர்கள் அனைவரும்  ரேஷன் கடைகளுக்கு வந்து விரல் ரேகையை பதிவு செய்து பெயர் இருப்பதை உறுதி செய்யவும் என  அறிவிக்கப்பட்டது.    சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள்  “ ஒவ்வொரு ரேஷன் கடையிலும் உள்ள அனைத்து அட்டைதாரர்களின் பெயர், அட்டை எண் உட்பட  விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரேஷன் விரல் பதிவு கைரேகை


இந்நிலையில் ரேஷன் கடைகளில்  விரல் ரேகையை பதிவு செய்யாவிட்டால், இந்த மாத இறுதிக்குள் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் தற்போது தேர்வுகள்  நடைபெற்று வரும் சூழ்நிலையில்   குடும்ப அட்டையில் பெயர் உள்ள மாணவர்களையும் அழைத்து வர வலியுறுத்துவது  ஏற்புடையது அல்ல எனவும்  அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web