காய்ச்சல் வந்தா அலட்சியப்படுத்தாதீங்க.. அமைச்சர் எச்சரிக்கை!!

 
டெங்கு

இன்று அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு டெங்கு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் வீடு வீடாக நிலவேம்பு கஷாயம் கொடுக்கவும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெங்கு

அதில் தமிழகத்தில்  டெங்கு மற்றும் மழை கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை  இன்று மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 9 மாதங்களில்  மட்டும் 4524 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  அரசு மருத்துவமனைகளில் டெங்குவிற்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. சளி, இருமல், காய்ச்சல் வந்தால் அதுவும் 2  நாட்களுக்கு மேல் நீடித்தால் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web