10ம் வகுப்பு படிச்சிருந்தா போதும்... தமிழகம் முழுவதும் 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள்!

 
2027ல் இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்புடன்  மக்கள் தொகை கணக்கெடுப்பு!  

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: கிராம ஊராட்சி செயலாளர்
மொத்த காலியிடங்கள்: 1483
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும்.

குரூப் தேர்வு டிஎன்பிஎஸ்சி

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழி படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப்பிரிவு - 18 முதல் 32 வயது வரை
பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / முஸ்லிம் பிரிவு – 18 முதல் 34 வயது வரை
ஆதிதிராவிடர் / அருந்ததியர் / பழங்குடியினர் / ஆதரவற்ற விதவை – 18 முதல் 37 வயது வரை
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டு சலுகை வழங்கப்படும்.

தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் – ரூ.50
பிற பிரிவினர் – ரூ.100

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க கடைசி நாள் – 9.11.2025

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnrd.tn.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?