பணம் கொடுத்தா தான் கிடைக்கும்... கறார் காட்டி ரூ.1,500 லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக லஞ்சம் பெற்ற தாசில்தார் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருக்குவளை பண்ணைத் திறவையில் வசிக்கும் அனுசியா என்ற பெண், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால், விண்ணப்பம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்ததால், தனது சகோதரர் ரமேஷை தாசில்தார் பாக்கியவதி என்பவரை தொடர்பு கொள்ளச் சொன்னார்.

அப்போது, ரேஷன் கார்டை செயல்படுத்த ரூ.1,500 லஞ்சம் தேவைப்படும் என்றும், பணம் தரவில்லை எனில் ரேஷன் கார்டு கிடைக்காது என்றும் கறார் காட்டிய தாசில்தாரின் செய்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து, நேற்று மாலை ரமேஷ், தாசில்தாரிடம் பணம் கொடுக்கும் நேரத்தில் அங்கு மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கையும் களவுமாக லஞ்சத் தொகையைப் பெற்ற தாசில்தார் பாக்கியவதியை உடனடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் திருக்குவளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
