உஷார்... இது போல் அழைப்புக்கள் வந்தால் அவாய்ட் பண்ணுங்க... சைபர் க்ரைம் எச்சரிக்கை!

 
சைபர் க்ரைம்


 
தொழில்நுப்ட வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பல வேலைகளை சுலபமாக்கினாலும் அதிலும் சைபர் க்ரைம் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் போலி கூரியர் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த மோசடி கும்பல்கள், பொதுமக்களுக்கு அவர்களின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக  முதலில் தெரிவிப்பர்.

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

போலீஸ் விசாரணை நடப்பதாகவும், மேலும் விவரங்களுக்கு ஸ்கைப் மூலம் போலி அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும்  கூறுவர்.  இந்த போலி அதிகாரிகள் உண்மையான போலீஸ் அதிகாரிகளைப் போல் நடித்து மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபடுவர்.  பல்வேறு காரணங்களைக் காட்டி பணத்தை மோசடி செய்துவிடுவர்.  இது குறித்து  புனேயில் உள்ள போலீஸ் சைபர் கிரைம் பிரிவு ஒரு வழக்கை விசாரணை செய்து வந்தனர். அந்த வழக்கில் ஒரு பெண்ணிடம் இருந்து ரூ25 லட்சம்  மோசடி செய்யப்பட்டிருந்தது.
சைபர் தாக்குதல்

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சைபர் குற்றவாளிகளுக்கு பணத்தை மாற்றி விடுவதுடன், ரூ 2 கோடிக்கும் அதிகமான பணப்பரிமாற்றங்கள் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  உங்களுடைய பயம் தான், அவர்கள் பலம் ஆகையால் இது மாதிரி அழைப்புகள் வந்தால் உடனடியாக  காவல்துறையை அணுகுங்கள்  அல்லது இதுமாதிரியான அழைப்புக்களை தவிர்த்து விடுங்கள்.  இந்த வகையான மோசடிகளில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.   

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!