இந்தோர் ஐஐடி கவர்னர் குழு தலைவராக கே.சிவன் நியமனம்!!

 
இஸ்ரோ சிவன்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விண்வெளி துறையின் முன்னாள் செயலாளர்  கே.சிவன். இவர் பிரசித்தி பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்தோர் ஐஐடியின், கவர்னர்கள் குழுவின் தலைவராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த பொறுப்பில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவரே  நீடிப்பார். இந்த கல்வி நிறுவனத்தில் விண் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

கே.சிவன்

இதன் அடிப்படையில்  கே.சிவனுக்கு  புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து  இந்தோர் ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில்  இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், விண்வெளி துறையின் முன்னாள் செயலருமான டாக்டர் கே.சிவன், ஐஐடி இந்தோரின் கவர்னர்கள் குழுவின் தலைவராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பதவியிலிருந்த பேராசிரியர் பி.தீபக் பாதக்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்தோர் ஐஐடி

 சமீபத்தில்  ஐஐடி இந்தோரில் விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியல்  அதனையொட்டிய 10 புதிய கல்வித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக பி.டெக்., விண்வெளி அறிவியல் மற்றும் பொறியியலில் வருடத்துக்கு 4 மாணவியர் உட்பட 20 பேர்   படித்து  வருகின்றனர். இவர்களில் இருந்து   இந்திய விண்வெளித்துறையின் எதிர்காலத்துக்கு தேவையான விஞ்ஞானிகளை உருவாக்க, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனின் வழிகாட்டுதல் உதவும் என இந்தோர் ஐஐடி விளக்கம் அளித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web