ஐஐடி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் சோகம்!!

 
iit delhi

டெல்லியில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில்   அணில் குமார்  என்ற 21 வயது மாணவர்  பி.டெக் கணிதம் மற்றும் கம்பியூட்டிங் வகுப்பு படித்து வந்தார்.   அணில் குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடத்தி முடித்ததில்  சில பாடங்களை படிக்காததால் இவர்   6 மாதங்களாக ஐஐடி விடுதியில் தங்கி அணில் குமார் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

iit

இந்நிலையில், அணில் குமார் நேற்று மாலை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையின் கதவு வெகுநேரமாக திறக்காததை கண்டு சந்தேகமடைந்த சக மாணவர்கள்  உடனடியாக நிர்வாகத்திடன் தெரிவித்தனர் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  

iit corona

போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அணில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில்  பிணமாக கிடந்தார். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர்   பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web