’நைட் 11 மணிக்கு வரேன் பாயை எடுத்து வை'.. மாணவியிடம் எல்லை மீறிய ஆசிரியர் போக்சோவில் கைது!

 
மாணவிக்கு பாலியல் தொல்லை

கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், காரமடையை அடுத்த கண்ணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் அய்யாசாமி (வயது 39), நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் அறிவியல் நடைமுறை வகுப்பு எடுக்க இந்த பள்ளிக்கு வந்துள்ளார்.தொடர்ந்து ஏழாம் வகுப்பிற்கு பாடம் எடுத்துள்ளார்.

பாலியல் தொல்லை

 அப்போது அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், எங்கள் வகுப்பிற்கு எப்போது வருவீர்கள் என்று ஆசிரியரிடம் கேட்க, ஆசிரியர் அய்யாசாமி, “இரவு 11 மணிக்கு வரேன் பாயை எடுத்து வை” என்றார். இதுகுறித்து, மாணவி பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மூலம் புகார் அளித்தார்.

இளம் நடிகர் கைது

போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா ஆசிரியர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்திய நிலையில், நடந்த சம்பவம் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web