’நான் விலகுறேன்’.. நாம் தமிழர் கட்சி விவகாரத்தில் சிக்கி அவஸ்தை.. எஸ்.பி வருண்குமார் திடீர் முடிவு!
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதுபோன்ற விமர்சனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலர் எஸ்.பியை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரையும் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தன்னையும் தனது குடும்ப பெண்களையும் தரக்குறைவாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி வருண்குமார் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், சமூக வலைதளங்களில் வெளியான தவறான பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் 8 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது; நான் விருப்பத்துடன் காவல்துறையில் சேர்ந்தேன். எனது 13 வருட ஐபிஎஸ் வாழ்க்கையில், எல்லா வருடங்களிலும் உயர் அதிகாரிகளிடமிருந்து சிறந்த மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே, காவல்துறையில் சேர்ந்த பிறகு, சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
சமீபத்தில், சர்ச்சைக்குரிய அவதூறுக்காக ஒரு யூடியூபர் கைது செய்யப்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டார். யூடியூபரைச் சார்ந்த கட்சி ஒருங்கிணைப்பாளர் என்னை (சில சாதிப் பெயர்களைப் பயன்படுத்தி) சட்டப்பூர்வ அடிப்படையில் பணிபுரிந்ததற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் திட்டினார். இது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் தீவிரமான அவதூறு கோணத்தைக் கொண்டிருந்தது. எனவே, அதற்கு எதிராக எனது வழக்கறிஞர் மூலம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பினேன்.
பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு ஆபாசத் தாக்குதல்கள் என்பது ஒரு விஷயமே இல்லை. சட்டப்படி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளேன். க்ஷ்என்னைத் தவிர, என் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகள் மீது ஆபாசமான பேச்சு, அவதூறான செய்திகள், அருவருப்பான வாக்கியங்களை பரப்பி வருகின்றனர். எக்ஸ் தளத்தில் எனது குழந்தைகள் மற்றும் எனது குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து ஆபாசத்தில் ஈடுபடும் இந்தக் கணக்குகளை ஆய்வு செய்யும் போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொடங்கி மாநில நிர்வாகிகள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இவை இயக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் இவை அனைத்தும் போலி கணக்குகள் மற்றும் அதையே தொடர்ந்து செய்து வருகின்றன. இது தொடர்பாக நான் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரு சராசரி குடும்ப மனிதராக இருந்தும், என் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டும், நானும் என் மனைவியும் இந்த X இணையதளத்தில் இருந்து தற்காலிகமாக விலக முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவு தற்காலிகமானது. பயத்தினாலோ வெறுப்பாலோ நாங்கள் அதை மேற்கொள்ளவில்லை.
ஒரு மாவட்ட கண்காணிப்பாளரின் குடும்பத்தை இந்த அளவுக்கு தாக்கினால், சாமானியர்களையும் பெண்களையும் என்ன செய்வார்கள்? இதுவரை பதிவிட்ட ஆபாசப் பதிவுகள் எதையும் நீக்காத, வருத்தம் தெரிவிக்காத, மன்னிப்பு கேட்காத இந்தக் குழுவுக்கு சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 அதிகாரிகள் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன். இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்வேன்" என்று வருண் குமார் ஐபிஎஸ் கூறினார்.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!