’’மிக்க மகிழ்ச்சி’’.. பதவியைப் பறிகொடுத்த பிறகு மனோ தங்கராஜ் போட்ட அடடே பதிவு!
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி தற்போது அமைச்சர்களாக உள்ள செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மாறாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி. செழியனும், ராஜேந்திரனும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. இது திமுகவில் கோஷ்டி பூசல் எல்லாம் கிடையாது.. சட்டை உன்னது தான் ஆனா மாப்பிள்ளை நீயில்லை என்கிற காமெடி கதையாக திமுகவில் பலரும் உதயநிதி விஷயத்தில் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று காதை கடிக்கிறார்கள் மூத்த நிரூபர்கள்.
அந்த பதவியில், நான் எனது பதவி காலத்தில் இத்தனை நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறேன்.. ஆனாலும் என் பதவியைப் பறித்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ், தான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த பணிகளை பட்டியலிடுவதாக தனது எக்ஸ் போஸ்டில் தெரிவித்துள்ளார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.
— Mano Thangaraj (@Manothangaraj) September 29, 2024
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம்…
2021 - அவர் ஐடி அமைச்சராகப் பொறுப்பேற்றபோது 9.5% ஆக இருந்த தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 2022 இல் 16.4% ஆகவும், 2023 இல் 25% ஆகவும் உயர்ந்தது. 2023ல் அவர் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது. மேலும் 2024ல், ஆவின் வரலாற்றில் முதல்முறையாக 38 லட்சம் லிட்டராக அதிகரித்தது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதுடன், 10 நாட்களுக்கு ஒருமுறை பால் பணம் வினியோகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் வினியோகம் செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடித்து மக்களை ஒருங்கிணைத்து மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளேன்.
இந்த திட்டத்திற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி! மதவாத பாசிச அரசியலை எதிர்க்கவும், ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தவும், சமூக நீதியை நிலைநாட்டவும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். 2026 தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தமிழக அரசியலில் அதிரடியாக நிறைய மாற்றங்கள் வரும் என்கிறார்கள்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!