மோந்தா புயல் தாக்கம் தீவிரம்... துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 
கரையோர மக்களே உஷார்... 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் வடகிழக்கு பருவமழையைத் தூண்டி தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் நேற்று முதல் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

புயல்

இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், “மோந்தா புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் அமைந்துள்ளது. புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே நாளை (28ஆம் தேதி) மாலை அல்லது இரவு தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புயல் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 25ஆம் தேதி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் என மொத்தம் 9 துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புயல்

புயலின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அதே 9 துறைமுகங்களிலும் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

வானிலை நிபுணர்கள் பொதுமக்களும், குறிப்பாக மீனவர்களும் கடல் பயணத்தை தவிர்த்து, அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென எச்சரித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?