10, +2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கான முக்கிய அப்டேட்... சிபிஎஸ்இ அறிவிப்பு!

 
சி.பி.எஸ்.இ

சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடப்பாண்டு 2023-24 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. 

மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!!

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி துவங்கி மார்ச் 13ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதே போன்று, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ம் தேதி பொதுத்தேர்வுகள் துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு  http://www.cbse.gov.in/ எனும் சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10  மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை மேற்காணும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிபிஎஸ்இ

தேர்வறைக்கு வருகை தரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இந்த திதியை மறக்காதீங்க!

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web