கப்பலில் இறக்குமதி செய்யப்பட்ட கார்... விற்பனைக்கு அல்ல!

 
லம்போகினி கார்


இந்தியாவிற்கு கப்பலில் புதியதாக  லம்போர்கினி ரெவால்டோ என்ற சூப்பர் காரின் முதல் யூனிட் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஷோரூமில் காட்சிக்கு நிறுத்தி வைப்பதற்காக முதல் லம்போர்கினி ரெவால்டோ கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. காரை பயபக்தி உடன் பூஜை போட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஷோரூமுக்குள் கொண்டு சென்றார். இது குறித்து சமூக வலை தளங்களில்  வெளியிடப்பட்ட   வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ குறித்த கூடுதல் விபரங்களையும், இந்த மாடர்ன் லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லம்போகினி கார்


லம்போர்கினியில் இருந்து இந்தியாவில் சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார் ரெவால்டோ . இந்த லம்போர்கினி சூப்பர்காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.89 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கு புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
லம்போர்கினி நிறுவனத்திற்கு பெங்களூரில் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமுக்கு கப்பல் மூலமாக வெளிநாட்டில் இருந்து ஒரு ரெவால்டோ கார் கொண்டுவரப்பட்டது. இது விற்பனைக்கானது அல்ல.  தற்போது கொண்டு வரப்பட்ட ரெவால்டோ கார்  வெறும் டெமோ கார் மட்டுமே எனக் கூறப்படுகிறது. டெமோ காராக இருப்பினும், விலையுயர்ந்த கார் என்பதால் மாலை அணிவித்து, பூஜை உடன் ஷோரூமினுள் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில் கோவில் ஒன்றின் முன்பு இந்த லம்போர்கினி ரெவால்டோ கார் நிறுத்தப்பட்டு இருப்பதை காணலாம். ஒன்றிற்கு மேற்பட்ட கோவில் பூசாரிகள் இந்த லம்போர்கினி காருக்கு பூஜை செய்தனர். இந்த குறிப்பிட்ட ரெவால்டோ கார் கருப்பு கலந்த வெர்டே டர்பைன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. காருக்கு உள்ளே லெதர்கள் ஆரஞ்ச் நிறத்தில் உள்ளதை காருக்கு வெளியே இருந்தே பார்க்கலாம்.  


லம்போர்கினி ரெவால்டோ கார் முதல்முறையாக கடந்த 2023ல் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் 2023 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரெவால்டோ கார்களை மட்டுமே விற்பனை செய்ய லம்போர்கினி திட்டமிட்டது.  
2026 லிருந்து  வரையிலான ரெவால்டோ கார்கள் அனைத்தும் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்டு விட்டன.  முன்பு விற்பனையில் இருந்த லம்போர்கினி அவெண்டேடார் காருக்கு மாற்றாக விலையுயர்ந்த லம்போர்கினி காராக ரெவால்டோ அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு பிளக்கின் ஹைப்ரீட் சூப்பர்கார் ஆகும். இத்தகைய ஹைப்ரீட் டெக்னாலஜியை கொண்ட முதல் லம்போர்கினி காராக ரெவால்டோ கருதப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web