இம்ரான்கானுக்கு செப்டம்பர் 13 வரை காவல் நீட்டிப்பு!!

 
இம்ரான்கான்

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் .இவருக்கு வயது 70. இவர் 2018ல் பாகிஸ்தான்  பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, அந்த நாட்டின்   பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2022ஏப்ரலில்  எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான்  பிரதமர் பதவியை இழந்தார். அத்துடன் அவர் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இம்ரான்கான் மீது 100க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. அதன்படி இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலமான தோஷகானாவில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று பணமாக்கி வைத்துக் கொண்டார் என வழக்கு தொடரப்பட்டது

இம்ரான்கான்

இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம்   இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதன்படி  , இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன்  இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.  இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில்  நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தனர். அதன்படி இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு   இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதே நேரத்தில்  இம்ரான்கானை உடனடியாக விடுவிக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இம்ரான்கான்

இந்த சூழலில் அடுத்த சில மணிநேரத்தில் இம்ரான்கான்  இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது முக்கிய மீட்டிங், அரசு உயரதிகாரிகளுடன் பேசும் சைபர்  கேபிள் சேவையை தனது சொந்த கட்சி மாநாட்டில் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இதனால் அவரை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை  சைபர் வழக்கில்   நடந்த விசாரணையில் சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் அரசு ரகசியங்களை வெளியிட்டது குறித்து விசாரணை நடத்தி வந்த  சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை