”பிஎப் பணம் கொடுங்க” இழுத்தடித்த நிறுவனம்.. மனமுடைந்த கேன்சர் நோயாளி அலுவலகம் முன் தற்கொலை..!

 
சிவராமன்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே பெரம்பராவை சேர்ந்தவர் சிவராமன். சிவராமன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ டயர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இதையடுத்து, 9 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது பிஎப் பணத்தை விடுவிக்குமாறு இபிஎப்-ல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

தற்கொலை செய்து கொண்ட சிவராமன்

சிகிச்சைக்கு செலவழிக்க, பிஎப் கணக்கில் 80 ஆயிரம் ரூபாய் தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி பிஎப் பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 1960ல் பள்ளிப்படிப்பை படித்த சிவராமனிடம், கல்வி ஆவணங்களை ஒப்படைக்கும்படி, பிஎப் நிர்வாகம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இவரது விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களாக சிவராமன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

கொச்சி இ.பி.எஃப்.ஓ., அலுவலகம்

இந்நிலையில், கொச்சியில் உள்ள பிஎப் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த சிவராமன், மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பிஎப் பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவர்கள் நள்ளிரவில் ஆஸ்டர் மெடிசிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web