தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் - கார்த்தி சிதம்பரம்!

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும். கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெற வேண்டும். கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. கூட்டணி என்பதால் நாம் எதையும் தட்டிக் கேட்காமல் நிற்கக் கூடாது. காவல்துறை ரவுடிகளை என்கவுன்டர் செய்து வழக்கை சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்கவேண்டாம். வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள்.
இதை எல்லாம் பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும்.
அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம். திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுகவின் திட்டங்களை மதிக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் நாம் பொதுப்பிரச்சினைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம். இனி தயக்கம் காட்ட கூடாது" என்றார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா