ஏர் இந்தியா விமானத்தின் அலட்சியம்.. பலியான 80 வயது முதியவர்.. நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்!

 
ஏர் இந்தியா

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்க கால தாமதம் ஏற்பட்டதால் 80 வயது பயணி உயிரிழந்த சம்பவம் சமீப காலமாக இந்தியாவில் பதற்றத்தை கிளப்பியுள்ளது. இந்த விவாகாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  


2 சக்கர நாற்காலிகள் இணையதளம் மூலம் வயதான தம்பதியால் முன்பதிவு செய்யப்பட்டன. கூட்டம் அதிகமாக இருப்பதால், வயதான தம்பதிக்கு 2 சக்கர நாற்காலிகளில் ஒன்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 80 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து 1.5 கி.மீ. செல்லும் வரை நடந்து கொண்டிருந்தார். இதனையடுத்து விமான நிலைய வாயிலில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பயணத்தின் போது விமானம் ஏறும் போது அல்லது இறங்கும் போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என்று  விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web