அண்ணாமலை பாதயாத்திரையில் பரபரப்பு.. பேனர் விழுந்து துணி வியாபாரிக்கு நேர்ந்த சோகம்..!

 
கலீல்

திருப்பத்தூரில் பாஜக கொடிக்கம்பம்,பேனர் பொதுமக்கள் மீது சாய்ந்ததில் ஒருவர் மண்டை உடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட  பகுதிகளில் என் மண் என் மக்கள் கருத்தை வலியுறுத்தி  பாஜக சார்பில் இன்று பாதயாத்திரை நடைப்பெற்றது.

அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக அக்கட்சியினர் புதுப்பேட்டை ரோட்டிலிருந்து திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் வரை ஏராளமான கொடிக்கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் ஃபோர்டு வைத்திருந்தனர்.இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுப்பேட்டை ரோட்டிலிருந்து அவரது பாதயாத்திரையை தொடங்கிய போது ஏராளமான கூட்டம் கூடியது.

பின்னர்  பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்த கொடி கம்பம் மற்றும் பேனர் பொதுமக்கள் மீது சாய்ந்ததில் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்த துணி வியாபாரி கலீல் என்பவர் தனது வீட்டிலிருந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல அவரது மிதிவண்டியில் சென்ற போது திடீரென கூட்டத்தில் சிக்கி கொடிகம்பம் சாய்ந்ததில் அவரது மண்டை உடைந்து பலத்த படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு போலீசாரும் இதில் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web