ரூ.10,000 சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.2 கோடி வருமான வரி நோட்டீஸ்.. கதறும் கூலித் தொழிலாளி!
இந்தியாவில் வருடத்திற்கு 3 லட்சம் வரை சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வருமான வரி 0% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி, மாத வருமானம் ரூ.10,000 மட்டுமே இருக்கும் பீகாரைச் சேர்ந்த ராஜீவ் குமார் என்ற கூலித் தொழிலாளிக்கு ரூ.2 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது.
இதில் மேலும் இரண்டு நாட்களுக்குள் செலுத்தா விட்டால் ரூ.67 லட்சம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ராஜீவ் குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை, வாழ்நாள் முழுவதும் இந்த தொகையை சேர்க்க முடியாது என புலம்பிய ராஜீவ் குமார், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்ய கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் வருமான வரித்துறையின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ரூ.10,000 சம்பாதிக்கும் தொழிலாளிக்கு ரூ.2 கோடி வருமான வரி நோட்டீஸ் அனுப்பிய பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!