பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கர துப்பாக்கிச்சூடு.. பொது தேர்தல் வேட்பாளர் பரிதாப பலி..!

 
 ரெஹான் ஜெப் கான்

பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பழங்குடியினர் மாவட்டமான பஜாரில் சுயேச்சை வேட்பாளர் ரெஹான் ஜெப் கான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது. அவரது 4 உதவியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Candidate among two gunned down in Pakistan ahead of national polls | Arab  News

இதில் ஜெப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உதவியாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

எல்லையில் இருபுறமும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர். எனினும், தாக்குதல் நடத்தியது யார் என்பது தெரியவில்லை. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த சில தொண்டர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.

PTI-affiliated election candidate from Bajaur shot dead

கட்சியின் கொடியை ஏந்தியவாறு இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, ​​எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அக்கட்சியின் 3 தொண்டர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web