'ஐஎன்டிஐஏ' பொதுக்கூட்டம்... ஆளே இல்லாத கடையில யாருக்கு டீ சமோசா ?

 
india

நாளுக்கு நாள் பிசுபிசுத்துக்கொண்டு இருக்கிறது எதிர்க்கட்சி கூட்டணியான 'ஐஎன்டிஐஏ' ! முதலில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வெளியே வந்தார் , அடுத்து கெஞ்சிப்பார்த்தும் பாசம் காட்டாவில்லை பஞ்சாப் பகவான், மமதை பிடித்து நோ சொல்கிறார் மம்தா பானர்ஜி, தேர்தலுக்குள் அரவிந்த் கெஜ்ரிவாலை அள்ளிவிடும் போல அமலாக்கத்துறை, மஹாராஷ்டிராவில் சரத்பவரோ மண்ணை கவ்விவிட்டார் அஜித்பவாருக்கு அதிகாரம் வழங்கிவிட்டது தேர்தல் ஆணையம்.
india
இதனால் அந்த கூட்டணி தலைவர்கள் மிகவும் 'அப்செட்'டில் உள்ள நிலையில் பாவப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தன்னுடைய மாநிலத்தில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் தருவதாக தெரிவிக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க் கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதைவிட்டு விலகி பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஐஎன்டிஐஏ பொதுக் கூட்டம் ஒன்றை இந்த மாத இறுதியில் மும்பையில் நடத்த காங்கிரஸ் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராகுல் காந்தி
இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், மம்தா, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி மொத்தத்தில் ஆளே இல்லாத கடையில டீ ஆற்றுவது எதற்காக எனத்தான் புரியவில்லை.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web