காதலுக்கு எல்லையே கிடையாது... இன்னொரு இந்தியா, பாகிஸ்தான் காதல் ஜோடி...!!

 
இந்தியா பாகிஸ்தான் ஜோடி

இந்தியா, பாகிஸ்தான்  நாடுகளுக்கிடையே எப்போதும் சண்டையும் சச்சரவும் என்ற காலம் குறைந்துகொண்டே வருகிறது. சமீபகாலமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இனம், மதம், மொழி , நாடு தாண்டிய காதல் மலர்ந்து  பூக்கள் பூக்கும் தருணமாக மாறி வருகிறது.  பாகிஸ்தானை சேர்ந்த மரியாவும், இந்தியாவை சேர்ந்த  சோனுவும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி 4 ஆண்டுகளாக காதல் வளர்த்தனர்.  

5வது திருமணம்

ஆன்லைனில் வளர்த்த காதலின் அடுத்த கட்டமாக நிஜவாழ்விலும் இணைய முடிவு செய்தனர்.  பெற்றோரிடம் போராடி அனுமதி வாங்கியுள்ளனர்.  திருமணத்திற்கு பிறகு  பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சோனுவின் சத்தியலி கிராமத்தில் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.இந்த காதல் ஜோடிக்கு  மக்பூல் சவுத்ரி என்ற சமூக சேவகர் உதவி வருகிறார். சௌத்ரி நாடு விட்டு நாடு மலரும் இது போன்ற காதல் விவகாரங்களில், விசா நடைமுறைகளை இனி இரு அரசாங்கங்களும் எளிதாக்க வேண்டும் என சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

இந்தியா பாகிஸ்தான் ஜோடி

விரைவில் இவரது விடாமுயற்சி மூலம்  மரியா - சோனு ஜோடி விரைவில் பஞ்சாபில் திருமணம் செய்து வாழ்க்கை நடத்த உள்ளனர்.  இதே போன்று  பாகிஸ்தான் கராச்சியில் வசித்து வரும்  ஜவாரியா கானம் இந்தியாவில்  கொல்கத்தாவில் வசித்து வரும்  காதலன் சமீர் கானை திருமணம் செய்து கொள்ள இவர் பேருதவியாக இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற இவர்களது திருமணம் தொடர்கதையாகி வருகிறது. இருநாடுகளும் பகை மறந்து கரம் கோர்த்து ஒற்றுமையாக வாழ இவர்களின் காதல்கள்  அடித்தளமாகட்டும்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web