இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் தற்காலிக ரத்து!! ரசிகர்கள் ஏமாற்றம்!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் ஆகஸ்ட் 30 ம் தேதி இலங்கையில் தொடங்கியது. இந்த தொடரில் 6 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம் இலங்கை 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று 2ம் கட்ட போட்டிகள் கொழும்புவில் 3 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது . ரோஹித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்துனர். 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது விராட் கோலி 8 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நாளை நடைபெறும் வகையில் ஏற்கனவே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக இறுதி போட்டிக்கு மட்டும் தான் ரிசர்வ் டே அறிவிக்கப்படும். இந்நிலையில், முதன் முறையாக ரசிகர்கள் அதிகம் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு சூப்பர் 4 சுற்றில் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!