இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் தற்காலிக ரத்து!! ரசிகர்கள் ஏமாற்றம்!!

 
இந்தியா பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர்   ஆகஸ்ட் 30 ம் தேதி இலங்கையில் தொடங்கியது. இந்த தொடரில்  6 அணிகள் கலந்து கொண்ட நிலையில்  இந்தியா பாகிஸ்தான், வங்கதேசம் இலங்கை 4 அணிகள்  சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முதல்  போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று 2ம் கட்ட போட்டிகள் கொழும்புவில் 3 மணிக்கு தொடங்கியது.

இந்தியா பாகிஸ்தான்


இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது . ரோஹித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்துனர்.  24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது விராட் கோலி 8 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடன்  களத்தில் உள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான்


 இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நாளை நடைபெறும் வகையில் ஏற்கனவே ரிசர்வ் டே  அறிவிக்கப்பட்டு இருந்தது.  பொதுவாக இறுதி போட்டிக்கு மட்டும் தான்  ரிசர்வ் டே அறிவிக்கப்படும். இந்நிலையில், முதன் முறையாக ரசிகர்கள் அதிகம் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு சூப்பர் 4 சுற்றில் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web