மகளிர் உலகக்கோப்பை ... இன்று இந்தியா vs வங்காளதேசம் மோதல்!

 
இந்தியா வங்கதேசம்

13வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் தலா ஒரு முறை மோதும் லீக் முறையில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.

இந்நிலையில், லீக் சுற்றின் இறுதிக்கட்ட ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (அக். 26) நவிமும்பையில் நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது.

மேலும், இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இவ்விரு ஆட்டங்களும் அரையிறுதிக்கான அணிகளின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தும் முக்கியப் போட்டிகளாக அமைய உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!