இந்தியா பாகிஸ்தான் மேட்ச்... அடுத்தடுத்து ஆட்டம் இழந்த ரோகித் சர்மா சுப்மன் கில்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
இந்தியா பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று விளையாடி வருகின்றன.  இன்று பிற்பகல் 3 அணி அளவில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  இந்த ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டால் நாளையும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான்

இதில் தற்போதைய நிலவரப்படி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 58 ரன்களில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்த நிலையில் ஷதாப் கான் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்  இந்தத் தொடரில் இரு அணிகளும் 2வது முறையாக இன்று விளையாடி வருகின்றன.   லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில்   மழை காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்தியா பாகிஸ்தான்

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இது 2வது ஆட்டமாகும். காயம் காரணமாக லீக் சுற்றில் களமிறங்காத கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதேபோன்று நேபாளத்திற்கு  எதிரான ஆட்டத்தில் விலகி இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத்பும்ராவும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இஷான் கிஷன் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அரை சதம் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web