உலகின் 3வது பொருளாதார வலிமைமிக்க நாடாக இந்தியா மாறும் - பிரதமா் மோடி!

 
மோடி

உலகளாவிய விநியோக இணைப்பு மூலம் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்க நாடாக இந்தியா மாறும் என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தூத்துக்குடி சா்வதேச சரக்குப் பெட்டக முனையம் தொடக்க விழா வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது பேசிய அவா், “இந்த நாளானது வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

தூத்துக்குடியின் இந்தப் புதிய சா்வதேச கொள்கலன் முனையம் இந்தியாவின் கடல் சாா்ந்த உள்கட்டமைப்பின் ஒரு புதிய நட்சத்திரம் ஆகும். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமும், 300 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட இந்த முனையம் இத்துறைமுகத்தின் திறனை மேலும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றும்.

இதன் வாயிலாக துறைமுகத்தின் தளவாடங்களுக்கான செலவு குறையும், இந்தியாவின் அந்நியச் செலாவணியும் அதிகரிக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்னா் இத்துறைமுகம் தொடா்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். அப்போது இந்தத் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்காக பல முயற்சிகள் தொடங்கின.

மோடி

கடந்த பிப்ரவரி மாதம் நான் தூத்துக்குடி வந்தபோது, துறைமுகம் தொடா்பான பல பணிகள் தொடங்கப்பட்டு இருந்தன. இந்தப் பணிகள் வேகமாக முடிவடைந்ததை பாா்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையத்தில் 40 சதவிகிதம் மகளிா் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. அதாவது, இந்த முனையம், கடல்சாா் துறையில் மகளிா் முன்னெடுத்துச் செல்லும் முன்னேற்றத்தின் அடையாளமாக இருக்கிறது.

குறிப்பாக நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் தமிழ்நாட்டு கடற்கரைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இங்குள்ள துறைமுக கட்டமைப்பில் 3 பெரிய துறைமுகங்கள் மற்றும் 17 சிறிய துறைமுகங்கள் மூலம், தமிழ்நாடு கடல்சாா் வா்த்தக வலையமைப்பின் ஒரு மிகப்பெரிய மையமாகத் திகழ்கிறது.

துறைமுகங்களின் வளா்ச்சியை விரைவுபடுத்த வெளிப்புற துறைமுக கொள்கலன் முனையத்தை மேம்படுத்த சுமாா் ரூ.7ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மோடி கன்றுக்குட்டி

கடல்சாா் பணிகள், கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுமைக்கும் நிலையான மற்றும் முன்னோக்கிய சிந்தனைக்கான வழிகாட்டியாக இந்தியா விளங்குகிறது. மேலும், இந்தத் துறைமுகம், பசுமை ஹைட்ரஜன் மையமாகவும், கடற்காற்று ஆற்றலுக்காகவும் பெயா் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி நமது மிகப்பெரிய பலமாகும்.

இன்று தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய முனையம் நமது வலிமைக்கான ஆதாரமாகத் திகழ்கிறது. இதன் காரணமாக உலகளாவிய வா்த்தகத்தில் இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த வலிமை இந்தியாவை மிக விரைவில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்கதாக மாற்றும். வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் புதிய முனையத்தின் உருவாக்கத்துக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என்றாா்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை