முதன் முறையாக வில் வித்தையில் இந்தியா தங்கம் வென்று சாதனை!!

 
வில்வித்தை

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில்  12 வது நாளாக நடைபெற்று வருகிறது.  இந்தியா பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கப்பட்டியலில்  4வது இடத்தில் உள்ளது.   அந்தவகையில் பெண்களுக்கான 50 மீ போட்டி வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணிக்கு எதிராக 230-229 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

வில்வித்தை

இதன்  மூலம்  2வது  தங்கப் பதக்கத்தை வென்றது.  இந்தியாவின் 19வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  முதல் சுற்றில் இந்தியா  2  புள்ளிகள் பின்தங்கி இருந்த நிலையில்  2வது சுற்றின்  6வது அம்புக்குறியில் சீன தைபே அணி பெற்ற 7 புள்ளிகள் பெற்றதால் இந்தியா முன்னிலைக்குச் சென்றது. இறுதி முடிவில், 230-229 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.  

வில்வித்தை

19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் 82வது பதக்கம்  என்படு குறிப்பிடத்தக்கது.  அதன்படி, இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.  பதக்கபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதே போல சீனா 174 தங்கம், 95 வெள்ளி, 52 வெண்கலம் என 321 பதக்கங்களுடன்  பதக்கபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web